இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
Published on

சென்னை,

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com