இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com