நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

21 மாவட்டங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
Published on

சென்னை,

டிட்வா புயல் காரணமாக இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com