மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதுபோக, அரியலூர் மற்றும் கோவையில் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com