மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இந்நிலையில், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை,ராமநாதபுரம், தூத்துக்குடி,கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






