காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனிடையே நள்ளிரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது

இந்த நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,

அரியலூர்,

செங்கல்பட்டு,

சென்னை,

கடலூர்,

காஞ்சிபுரம்,

மயிலாடுதுறை,

நாகப்பட்டினம்,

ராணிப்பேட்டை,

தஞ்சாவூர்,

திருவள்ளூர்,

திருவாரூர்,

வேலூர்,

விழுப்புரம்.

திண்டுக்கல்,

கள்ளக்குறிச்சி,

கரூர்,

பெரம்பலூர்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம்,

திருச்சிராப்பள்ளி,

திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது மிதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com