தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தெற்கு உள் கர்நாடகா முதல் தெலுங்கானா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

05-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

06-03-2026 மற்றும் 07-03-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08-03-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

09-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

10-03-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

11-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு:

06-03-2026 மற்றும் 07-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:

05-03-2026 மற்றும் 06-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

07-03-2026 முதல் 09-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (05-03-2026) மற்றும் நாளை (06-03-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்:

05-03-2026 முதல் 09-03-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com