எல் நினோ தாக்கம்; 64 சதவீதம் மழை பற்றாக்குறை- வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜூன் 4 முதல் 15 வரை சாதாரணமாக 53.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், வெறும் 19.2 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது.
மழை
Published on

நாட்டில் எல் நினோ தாக்கத்தால் வானிலை நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படுகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நான்கு மாநிலங்களில் மழைப்பொழிவு குறைவு எனவும் செயற்கைக்கோள் படங்களில் பருவமழையின் நகர்வு மெதுவாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4 முதல் 15 வரை சாதாரணமாக 53.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், வெறும் 19.2 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. இதன் விளைவாக 64% மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கனமழைக்கான வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com