தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்பம் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com