தமிழகத்தில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

வெயில் அளவு

  1. வேலூர் 106.16

  2. திருச்சி 104.54

  3. திருத்தணி 104.54

  4. சென்னை ஏர்போர்ட் 104.36

  5. கரூர் பரமத்தி 103.1

  6. மதுரை 102.92

  7. சென்னை நுங்கம்பாக்கம் 102.2

  8. தஞ்சாவூர் 102.2

  9. மதுரை ஏர்போர்ட் 102.2

  10. நாமக்கல் 101.3

  11. ஈரோடு 100.4

  12. நாகை 100.4

  13. பாளையங்கோட்டை 100.2

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com