

சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-
ஈரோடு - 38.8°C = 101.8°F
மதுரை நகரம் - 39.2°C = 102.6°F
மதுரை விமான நிலையம் - 40°C = 104°F
பாளையங்கோட்டை - 38.1°C = 100.6°F
பரங்கிப்பேட்டை - 38.4°C = 101.1°F
திருச்சி - 38.9°C = 102.0°F
திருத்தணி - 38.5°C = 101.3°F
வேலூர் - 37.8°C = 100.0°F