தமிழகத்தில் 9 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தில் 9 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

  • சென்னை நுங்கம்பாக்கம் – 38.2°C = 100.8°F

  • சென்னை மீனம்பாக்கம் – 39.5°C = 103.1°F

  • ஈரோடு – 38.0°C = 100.4°F

  • மதுரை நகரம் – 39.2°C = 102.6°F

  • மதுரை விமான நிலையம் – 38.5°C = 101.3°F

  • பாளையங்கோட்டை – 39.9°C = 103.8°F

  • பரங்கிப்பேட்டை – 38.2°C = 100.8°F

  • தஞ்சாவூர் – 38.0°C = 100.4°F

  • திருச்சி – 38.4°C = 101.1°F

இதனை தவிர புதுச்சேரியில் 100.04° பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com