தமிழகத்தில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் மட்டும் வெயில் 103.1 டிகிரியை தொட்டுள்ளது.

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டையை தாண்டி வெப்பம் பதிவான இடங்கள் விபரம் பின்வருமாறு;

  1. தர்மபுரி - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

  2. ஈரோடு - 102.2 டிகிரி (39)

  3. கரூர் பரமத்தி - 103.1 டிகிரி (39.5)

  4. மதுரை விமான நிலையம் - 101.12 டிகிரி (38.4)

  5. நாமக்கல் - 100.76 டிகிரி (38.2)

  6. வேலூர் - 102.74 டிகிரி (39.3)

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com