

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4 ஆம் தேதி முதல்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107° F வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருத்தணி, கோவை, சேலம், பாளையங்கோட்டை, மீனம்பாக்கம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 100° ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 29 ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.