தமிழகத்தின் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்

அதிகபட்சமாக வேலூரில் 105.26° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105.26° பாரன்ஹீட் (41.7° செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் விவரம் வருமாறு:-

  1. கோயம்புத்தூர் - 100.94°

  2. தர்மபுரி - 102.56°

  3. ஈரோடு - 103.64°

  4. கரூர் பரமத்தி - 103.1°

  5. மதுரை நகரம் - 102.56°

  6. மதுரை விமான நிலையம் - 104°

  7. நாமக்கல் - 103.1°

  8. பாளையங்கோட்டை - 101.12°

  9. சேலம் - 102.56°

  10. திருப்பத்தூர் - 102.2°

  11. திருச்சிராப்பள்ளி - 101.66°

  12. திருத்தணி - 101.66°

  13. வேலூர் - 105.26°

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com