தமிழ்நாட்டில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.1 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது.
தமிழ்நாட்டில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.1 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவான இடங்கள் விவரம் பின்வருமாறு;-

  1. கரூர் பரமத்தி - 106.1

  2. ஈரோடு - 104.3

  3. மதுரை -104

  4. திருச்சி - 103.1

  5. வேலூர் - 102.7

  6. கோவை - 101.6

  7. தருமபுரி - 101.3

  8. நாமக்கல் - 101.3

  9. பாளையங்கோட்டை – 101.3

  10. சேலம் - 100.7

X

Daily Thanthi
www.dailythanthi.com