தமிழகத்தில் 12 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது

அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் ஈரோட்டில் 103.28 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 12 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் ஈரோட்டில் 103.28 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-

மதுரை விமான நிலையம் - 103.28 டிகிரி பாரான்ஹீட்

ஈரோடு - 103.28 டிகிரி பாரான்ஹீட்

வேலூர் - 102.92 டிகிரி பாரான்ஹீட்

பாளையங்கோட்டை - 102.56 டிகிரி பாரான்ஹீட்

கரூர் பரமத்தி - 102.2 டிகிரி பாரான்ஹீட்

கடலூர் - 101.84 டிகிரி பாரான்ஹீட்

சென்னை மீனம்பாக்கம் - 101.66 டிகிரி பாரான்ஹீட்

மதுரை நகரம் - 101.12 டிகிரி பாரான்ஹீட்

திருச்சி - 100.94 டிகிரி பாரான்ஹீட்

தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரான்ஹீட்

சேலம் - 100.22 டிகிரி பாரான்ஹீட்

சென்னை நுங்கம்பாக்கம் - 100.22 டிகிரி பாரான்ஹீட்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com