

சென்னை,
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4-ம் தேதி முதல்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 17 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 108.32° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவான இடங்களின் விவரம் வருமாறு:-
1. வேலூர் - 108.32° பாரன்ஹீட் (42.4° செல்சியஸ்)
2. கரூர் பரமத்தி - 106.7° பாரன்ஹீட் (41.5° செல்சியஸ்)
3. ஈரோடு - 106.52° பாரன்ஹீட் (41.4° செல்சியஸ்)
4. திருச்சி - 105.62° பாரன்ஹீட் (40.9° செல்சியஸ்)
5. திருத்தணி - 105.08° பாரன்ஹீட் (40.6° செல்சியஸ்)
6. மதுரை விமான நிலையம் - 104.9° பாரன்ஹீட் (40.5° செல்சியஸ்)
7. சென்னை மீனம்பாக்கம் - 104.36° பாரன்ஹீட் (40.2° செல்சியஸ்)
8. நாமக்கல் - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்)
9. நாகப்பட்டினம் - 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்)
10. மதுரை நகரம் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)
11. திருப்பத்தூர் - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)
12. தர்மபுரி - 102.56° பாரன்ஹீட் (39.2° செல்சியஸ்)
13. சேலம் - 102.56° பாரன்ஹீட் (39.2° செல்சியஸ்)
14. தஞ்சாவூர் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)
15. சென்னை நுங்கம்பாக்கம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)
16. கோயம்புத்தூர் - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)
17. பாளையங்கோட்டை - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)