தமிழகத்தில் 8 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது


தமிழகத்தில் 8 இடங்களில் இன்று வெயில் சதமடித்தது
x

கோப்புப்படம்

அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை

வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக கடுமையாக உள்ளது. ஏப்ரல், மே மாத வெயில் போல மக்களை வாட்டி வதைத்து வருகிறது வெப்பம். சென்னையிலும் அதே நிலைதான் உள்ளது. எனினும், பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மாலையில் பெய்த மழை குளிர்ச்சியை தந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 8 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-

மதுரை விமான நிலையம் - 104.9 டிகிரி பாரன்ஹீட்

நாகப்பட்டினம் - 102.38 டிகிரி பாரன்ஹீட்

தஞ்சாவூர் - 102.2 டிகிரி பாரன்ஹீட்

சென்னை மீனம்பாக்கம் - 101.84 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி - 101.3 டிகிரி பாரன்ஹீட்

கடலூர் - 101.12 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் - 101.12 டிகிரி பாரன்ஹீட்

கரூர் பரமத்தி - 100.4 டிகிரி பாரன்ஹீட்

1 More update

Next Story