தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் வேளைகளில் கடுமையான வெப்பம் நிலவுவததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மதிய வேளைகளில் வெளியே செல்லுவதற்கே அஞ்சும் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது.
இன்று தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன் ஹீட்டை தாணி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105, கடலூர், நாகை 102, ஈரோடு, பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம், சென்னை மீனம்பாக்கம், புதுச்சேரி 101, நுங்கம்பாக்கம், திருச்சி, காரைக்கால், தஞ்சை, மதுரை நகரம் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story






