

சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மதுரை விமான நிலையம் - 102.92°F (39.4°C)
மதுரை நகரம் - 101.84°F (38.8°C)
திருச்சிராப்பள்ளி - 101.66°F (38.7°C)
சென்னை மீனம்பாக்கம் - 100.94°F (38.3°C)
ஈரோடு - 100.76°F (38.2°C)
நாகப்பட்டினம் - 100.4°F (38.0°C)
வேலூர் - 100.22°F (37.9°C)
சென்னை நுங்கம்பாக்கம் - 100.04°F (37.8°C)