அதிகாலையிலேயே சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
அதிகாலையிலேயே சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை!
Published on

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, மெரினா, காமராஜர் சாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி உட்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com