

சென்னை,
கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த 4-ந்தேதி முதல் கத்திரி வெயிலும் தொடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கோடை மழை உள் மாவட் டங்களில் பெய்த நிலையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் சற்று குறைந்து காணப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் பல இடங்களில் 100 டிகி ரியை தாண்டி வெயில் பதிவான நிலையில், கடந்த இரு தினங்களாக ஓரிரு இடங்களில் மட்டுமே அப்படி வெப்பம் பதிவாகிறது. அந்தவகையில் நேற்று ஈரோட்டில் 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்), வேலூரில் 100.4 டிகிரி (38 செல்சியஸ்) என 2 இடங்களில் மட்டுமே 100 டிகிரியை தாண்டி வெயில் இருந்தது.
இந்த சூழலில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி மற்றும் வட உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை, ராயல்சீமா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண் டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந்தேதி (திங்கட்கிழமை) வரையி லான 4 நாட்கள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியில் மித மான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.