தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு மத்தியில் ஆங்காங்கே அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் சூழலில், ஆங்காங்கே அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இந்த சூழலில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கோடை மழை தமிழ்நாட்டில் பரவலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிக ளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற் றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள்கர்நாடகா மற்றும் மராட்டியம் வழியாக வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதால் இந்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந்தேதி (புதன்கிழமை) வரையிலான 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களிலும் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம். தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், 11, 12 மற்றும் 13-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சில இடங் களில் மிதமான மழையும், டெல்டா, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com