

சென்னை,
தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், நாளை மறுநாள் திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.