அதிகனமழை எச்சரிக்கை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

இந்நிலையில் வங்க கடலில் சென்னையில் இருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை இது நோக்கி நகரும்.

இதன்காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். இதன்படி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக போதிய முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கனமழை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

* மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையொட்டி இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

* கனமழை காரணமாக காரைக்கால் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

* கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

* கனமழை காரணமாக தஞ்சாவூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com