4 நாட்கள் கன மழை பெய்யும்: 8 மாவட்டங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

கோவை, நிலகிரியில் கன மழை எச்சரிக்கை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
4 நாட்கள் கன மழை பெய்யும்: 8 மாவட்டங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்ட கலெக்டர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கோவை, நிலகிரியில் கன மழை எச்சரிக்கை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com