வரும் ஆண்டுகளில் மழை, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்

அடுத்த 2 தசாப்தங்களில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கூடுத லாக 15 முதல் 40 அசாதாரணமான வெப்ப நாட்களை எதிர் கொள்ளக்கூடும்
வரும் ஆண்டுகளில் மழை, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்
Published on

'டெல்லியில் நேற்று காலநிலை மீள்திறன் பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் நுண்ணறிவு அமைப்பின் (வலைத்தளம்) தொடக்க விழா நடைபெற்றது. இந்த தளத்தை மத்திய வர்த்த கம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.

ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் உருவாக்கிய இந்த தளத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக பதிவுகள் உள்ளன. அடுத்த 2 தசாப்தங்களில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கூடுத லாக 15 முதல் 40 அசாதாரணமான வெப்ப நாட்களை எதிர் கொள்ளக்கூடும் என்றும், இது மனித ஆரோக்கியத்தை பாதிக் கும் என்றும் இந்த பதிவுகளில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி அரு ணபா கோஷ் பேசுகையில், "டெல்லியில், வெப்பமான இரவுக ளின் எண்ணிக்கை, தற்போதுள்ள ஆண்டுக்கு சுமார் 180 நாட்க ளிலிருந்து, அடுத்த 25 ஆண்டுகளில் 210 நாட்களுக்கும் மேலாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் வெப்பநிலைக்கு இணையாக, அடுத்த 2 தசாப்தங்களில் கன மழை நிகழ்வுகளும் சீராக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள் ளது. மராட்டியம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு போன்ற மத்திய மற்றும் தென் மாநிலங் களில், வெயிலும், மழையும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com