9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக, 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு வங்காளம்-வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சாகர் தீவுகள்-கேப்புபுராவிற்கு இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என தெரியவந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக, 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com