தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் என தகவல்

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் என தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து குளிர்வித்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் கொளுத்தியது. இது, அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். நேற்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 104.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று முதல் 21-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 செல்சியஸ் வரை உயரக்கூடும். 22-04-2025 மற்றும் 23-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com