உருவாகிறதா இந்த ஆண்டின் முதல் புயல்? தமிழ்நாட்டுக்கு கனமழை வாய்ப்பு


உருவாகிறதா இந்த ஆண்டின் முதல் புயல்? தமிழ்நாட்டுக்கு கனமழை வாய்ப்பு
x

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

கடந்த 5-ம் தேதி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, 5-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது கடந்த 6-ம் தேதி காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவியது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதனையடுத்து, வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது புயலாக வலுவடைந்தால், 2026-ம் ஆண்டில் முதல் புயலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புயலாக உருவானால் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து நாளை மாலை மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 860 கி.மீ தெற்கு, தென் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 15 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story