காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலுக்கு முந்தைய நிலை வரை வலுவடைய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

இரு புயல்களால், சென்னை மற்றும் ஆந்திரா இடையே விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on: 

சென்னை

வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலுக்கு முந்தைய நிலை வரை வலுவடைய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் மழையை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மத்தியில் தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், வங்கக்கடலில் உருவான அர்னாப் மற்றும் முரசு என்ற இரண்டு புயல்கள் சமீபத்தில் கரையை கடந்து சென்றன.

விமான சேவை பாதிப்பு

இதில், ஆந்திராவின் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே அர்னாப் புயல் மிக தீவிர புயலாக கரையை கடந்து சென்றது. அப்போது, தமிழகத்தில் மழைப்பொழிவும் காணப்பட்டது.

இதேபோன்று, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் கரையை கடந்தது. எனினும், அர்னாப் புயல் கரையை கடந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளைப்போல முரசு புயலால் பாதிப்பு இல்லை. இந்த இரு புயல்களால், சென்னை மற்றும் ஆந்திரா இடையே விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் (14-ந்தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், 15-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைய வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலுக்கு முந்தைய நிலை வரை வலுவடைய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

X