இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்; தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தெற்கு கேரள கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்; தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில், 490 கி.மீ., தொலைவில் உள்ளது. மணிக்கு 6 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கையில் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.

தெற்கு கேரள கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com