தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Published on: 

சென்னை,

வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் மழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய கேரள பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

17 மாவட்டங்களில் மிதமான மழை

அதன்படி, இன்று (சனிக்கிழமை) மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவ கங்கை. புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.

X