உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... தீவிரமாகும் பருவமழை

'அர்னாப்' புயல் ஆந்திரா-ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நேற்று கரையை கடந்தது.
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... தீவிரமாகும் பருவமழை
Published on: 

சென்னை,

தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

அர்னாப்' புயல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று மழை கடந்த 25-ந்தேதி இரவு வரை பரவலாக பெய்து வந்தது. அதன் பிறகு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் ஆந்திரா-ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நேற்று கரையை கடந்தது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இதன் தொடர்ச்சியாக புயல் கரையை கடந்த சூழலில், கிழக்கு திசை காற்று இன்னும் திரும்பாத நிலையில், தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்.

மீண்டும் மழை

அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். நவம்பர் 1-ம் தேதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளை நோக்கி தாழ்வு மண்டலம் வரக்கூடும்.

இந்த தாழ்வுப் பகுதியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தின் 2-வது சுற்று மழை 1-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. பெரும்பாலும் வட தமிழகப் பகுதிகளில் நல்ல மழையை கொடுக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com