வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது
சென்னை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைது புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என்று ஏற்கனவே கூறியிருந்த அறிவிப்பையும் வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெற்றது.
Related Tags :
Next Story






