வடகிழக்கு பருவமழை தீவிரம்: காரைக்காலில் அவசர உதவி எண் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம்: காரைக்காலில் அவசர உதவி எண் அறிவிப்பு
Published on

தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் பொதுமக்கள் வசதிக்காக அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காரைக்கால் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில்

காரைக்கால் நகராட்சி இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதிமாக காரைக்கால் நகராட்சி கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது. ஆகவே பொதுமக்கள் 04368 222427 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com