வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு


வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு
x

FILE

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் படிப்படியாக விலகி வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2-வது வாரம் வாக்கில் விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது. அக்டோபர் 12-ந் தேதி முதல் 14-ந்தேதி இடையே விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் 20-ந்தேதிக்குள் முழுமையாக விலகி விடும் என்றும் அதனை தொடர்ந்து வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென் மேற்கு பருவமழை முழுமையாக விலகியவுடன் அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்றும் அவர்கள் தெரி வித்தனர். பருவமழை தொடங்க இருப்பதால் சென்னையில் சாலைகள், மழைநீர் கால்வாய் பணிகள், கால் வாய் தூர்வாருதல், நீர்நிலைகளில் தேங்கியுள்ள கழிவு கள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

1 More update

Next Story