பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது - பாலச்சந்திரன் தகவல்

வடகிழக்குப் பருவமழை 2024-ம் ஆண்டில் இயல்பை விட 33 சதவிகிதம் கூடுதலாக பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது - பாலச்சந்திரன் தகவல்
Published on

சென்னை,

வடகிழக்குப் பருவமழை 2024-ம் ஆண்டில் இயல்பை விட 33 சதவிகிதம் கூடுதலாக பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், "தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் இயல்பை விட 33 சதவீதம் அளவுக்கு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு காலத்தில் பருவமழை 590 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயலை ஒட்டி டிசம்பர் 11-ம் தேதிமுதல் 14-ம் தேதி வரை அதிகனமழை பெய்துள்ளது. நெல்லை, சேலம், தருமபுரி, திருபத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழை பதிவானது.

2024-ல் 4 புயல்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம். 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1,179 மி.மீ. மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com