

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், இந்த 5 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல், 33 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.