இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
Published on

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை,திருவள்ளூர், வேலூர், அரியலூர், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com