

சென்னை
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளிலிருந்து தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
21 மாவட்டங்கள்
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலின் சில பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தென்காசி, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.