நள்ளிரவு 2 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நள்ளிரவு 2 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
Published on

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 5 மாவட்டங்களில் நள்ளிரவு 2 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com