

சென்னை
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தின் தேனி மற்றும் கோவை, திண்டுக்கல் மாவட்டத்தின் மலைப்பிரதேச பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.