12 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துள்ளது.
12 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com