சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை


சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை
x
தினத்தந்தி 11 March 2025 11:39 AM IST (Updated: 11 March 2025 12:24 PM IST)
t-max-icont-min-icon

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது.

சென்னை

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று திடீரென மழை பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பெருங்களத்தூர், பெரும்பாக்க, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, பல்லாவரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story