

சென்னை,
சென்னையின் மாநகர், புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மே வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்பட சென்னையின் மாநகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.