12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோன்று, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com