19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில்,19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், கோவை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com