21 மாவட்டங்களில் அதிகாலை 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் ஈரோடு, பெரம்பலூர், தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
21 மாவட்டங்களில் அதிகாலை 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அதிகாலை 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதச்சேரியிலும் லேசான இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஈரோடு, பெரம்பலூர், தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com